படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி

இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி தருமபுரம் காவல் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி இ ராமநாதபுரம் பகுதியில் உள்ள உப காவல் நிலையம் மீது பெரிய மா மரக்கொப்பு முறிந்து விழுந்ததில் ஒரு பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்து கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மாமரம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தமையால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *