கொரோனா ஊரடங்கு : வைரலாகும் சிறுவனின் கால்பந்து வீடியோ

புதுடெல்லி

கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலகளவில் விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கால்பந்து ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு, கால்பந்து லீக்குகள் மெதுவாகத் தொடங்க காத்திருக்கின்றன.

இந்நிலையில் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி), தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு சிறுவன் அற்புதமாகக் கண்மூடிக் கொண்டு, ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டு கால்பந்துடன் விளையாடும் வீடியோவைப் பகிர்ந்து உள்ளது. 24 விநாடிகள் உள்ள அந்த வீடியோவில்,சிறுவன் ஸ்கிப்பிங் விளையாடியபடியே கால்பந்தை உதைத்துக்கொண்டிருந்தார்.

இந்த வீடியோவில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அந்தச் சிறுவன் இந்த தந்திரங்களை எல்லாம் ஒரு கண்மூடிக் கொண்டு செய்தது தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *