தஞ்சை வெண்ணாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

தஞ்சாவூர்:

தஞ்சை-கும்பகோணம் புறவழிச்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அடுத்தடுத்து 4 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த மாட்டு வண்டிகளை வழிமறித்து நிறுத்தினர். விசாரணையில், தஞ்சை கொடிக்காலூரை சேர்ந்த பிரகாஷ் (வயது 28), ராஜேந்திரன் (55), அன்பழகன் (54) மற்றும் விஜயராஜ் (36) என்பதும், அவர்கள் பள்ளியக்ரஹாரம் வெண்ணாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்து, 4 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *