கோவை அரசு மருத்துவமனையில் 17 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது – பீகார் வாலிபர் மீது வழக்கு

திருப்பூர்:

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந்தேதி பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட 17 வயது பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விசாரணையில் சிறுமி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் அதே கம்பெனியில் வேலை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் மண்டன் (27) என்பவர் சிறுமியுடன் அனுப்பர்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதும் தெரியவந்தது. சிறுமி கர்ப்பம் அடைந்த பின்னர் ரஞ்சித் மண்டல் தலைமறைவானார். இதனையடுத்து போலீசார் ரஞ்சித் மண்டல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *