இலங்கையில் 9 சங்கிலிகளுடன் இரண்டு பேரை மடக்கிய பொலிஸார்

இலங்கை யாழ்ப்பாணத்தில் சாலையில் செல்லும் பெண்களிடம் தொடர் சங்கிலி அறுப்புக்களில் ஈடுபட்ட இருவர் யாழ்.மாவட்ட சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருட்டுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்பது தங்கச்சங்கிலிகளும் இரண்டு கிராம் கெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் கைப்பற்றப்பட்ட 9 தங்கச்சங்கிலிகளில் ஆறு தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டது தொடர்பான புகார்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆயினும் மூன்று சங்கிலிகள் கைவிடப்பட்டது தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்படவில்லை. எனவே சங்கிலியை பறிகொடுத்தவர்கள் யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு குற்ற தடுப்பு பிரிவினருடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *