கொரோனா தொற்றை தவிர்க்க இந்த உணவுகளை மட்டும் தினமும் எடுத்து கொள்ளுங்கள்

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டும். ஒன்று உடலை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று , சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பீட்சா, பர்கர், சான்ட்விச், சுகாதாரமற்ற எண்ணெய்யில் தயாரிக்கப்படும் தள்ளுவண்டி பலகாரங்கள், குளிர்பானங்கள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு எதிரானவை. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க, சூப் வகைகள், சிறுதானிய உணவுகள், முட்டை, காய்கறிகள், பழவகைகள், உலர் பழவகைகள், பால் போன்ற உணவுகளை சாப்பிடவேண்டும். தினமும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் முறைப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாகும் . நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுப்பட்டியல் வருமாறு
காலை 7 மணி – மிளகு கஷாயம் குடிக்க வேண்டும் .
8.30 மணி- கோதுமை தோசை, தக்காளி சட்னி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் பூண்டு பால்.
11 மணி – மாதுளை, எலுமிச்சை ஜூஸ் குடிக்கவும் .
மதியம் 1 மணி – சிவப்பு அரிசி சாதம், நாட்டு காய்கறி கூட்டு, பசலைக்கீரை வெஜ் மிக்ஸ், வெண்டைக்காய் பிரட்டல், தக்காளி இஞ்சி ரசம், பழம் கலந்த தயிர் சாதம் எடுத்துகொள்ளலாம் .
மாலை 5 மணி – சோயா பீன்ஸ் சூப், கிரீன் சாலட் சாப்பிடலாம் .
இரவு 7.30 மணி – ராகி வெங்காய கல்தோசை, அவகேடா தக்காளி தொக்கு.
9.30 மணி – பனங்கற்கண்டு பால் அருந்தவும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *