வீட்டில் வைத்து பொரித்த மிளகு முட்டை செய்வது எப்படி

இன்று பொரித்த மிளகு முட்டை செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். முதலில் முட்டையை வேக வைத்து ஓடு நீக்கி, இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்னர் வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.தொடர்ந்து வாணலியில் உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு, கறிவேப்பிலை இவற்றை போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும். அதற்குப்பிறகு நைஸான தூளாக்கி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பின்பு  முட்டை துண்டுகள் மீது, தூளாக்கிய உளுத்தம்பருப்பு கலவையை தடவிக் கொள்ளவும். அதனையடுத்து  வெங்காயம் வதங்கியதும் முட்டைகளை போட்டு, மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்து கொள்ளவும். பின்னர் எடுத்து வைத்து பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *