கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காவல்துறை வளையத்துக்குள் வந்த செந்துறை

தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை சேர்ந்த மூன்று பேர் அரியலூர் சிமெண்ட் ஆலை ஊழியர் ஒருவர், திருமானூர் பகுதியை சேர்ந்த ஒருவர் என 5 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தனர். அவர்களை கடந்த வாரம் சுகாதாரத்துறையினர் அழைத்து சென்று அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி பரிசோதனை நடத்தி வந்தனர். அப்போது அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் செந்துறை போலீசார் மூன்று இஸ்லாமியர்களும் வசித்த பகுதியை சுற்றி 200 மீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பு வளையம் அமைத்து வெளி நபர்கள் யாரும் உள்ளே நுழையாமலும் அந்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் யாரும் வெளியே செல்லாமலும் தடைகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் செயல்பட்டு கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *