ஏர் இந்தியாவின் புதிய தலைவராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார்

ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதன் புதிய தலைவராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ். அதிகாரியான ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 1988ம் ஆண்டு நாகலாந்து கேடர் அதிகாரியான இவர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *