2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு !!

தமிழக சட்டசபையில் இன்று நடந்த பட்ஜெட் உரையில், ” தரமான தமிழ்நாட்டு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கான முக்கியக் காரணம் ஆவர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவாகும். 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டும் அது, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *