இந்தியாவுக்கு நவீன வான் பாதுகாப்பு சாதனத்தை அமெரிக்கா விற்க முடிவு செய்திருப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு

இந்தியாவுக்கு நவீன வான் பாதுகாப்பு சாதனத்தை அமெரிக்கா விற்க முடிவு செய்திருப்பதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இம்மாதம் இந்தியா வரும்போது, நவீன வான்பாதுகாப்பு சாதனத்தை விற்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவி த்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஆயிசா பரூக்கி (Aisha Farooqui) அமெரிக்காவின் முடிவு தெற்காசிய பிராந்தியத்தில் நிலவும் அமைதி மற்றும் வல்லமை சமநிலைக்கு (strategic balance) இடையூறை ஏற்படுத்தும் என்றார். இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவுகள், பாகிஸ்தானுக்கும், தெற்காசிய பிராந்தியத்துக்கும் பாதுகாப்பு ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், தெற்காசியா ஆயுத போட்டி மற்றும் மோதலை தாங்க முடியாது என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *