அரசியல்வாதிகளை எச்சரிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர்கள் !!

சமீப காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் கலந்த படம் வெளியாகும் போதும், பாடல் வெளியீட்டு விழாக்களில் அரசியல் நெடி கலந்து விஜய் பேசி வருவதும் ரசிகர்களை குதூகலிக்க வைத்துள்ளது. இந்நிலையில் நெய்வேலியில் நடைபெற்று வந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பின்னால் அரசியல் காரணங்களும் இருப்பதாக தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடிகர் விஜய் ரசிகர் மன்ற முன்னாள் மாவட்ட தலைவர் ஒரு பரபரப்பு போஸ்டரை அச்சடித்து மாவட்டம் முழுவதும் ஒட்டியுள்ளார். இதில், ” அரசியல்வாதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தளபதி அவர்கள் என்றும் ரசிகர்களான எங்களுக்கு மாஸ்டர் ஆக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம், தயவுசெய்து அவரை உங்களுக்கு ஹெட்மாஸ்டர் ஆக்கிவிடாதீர்கள் ” என்று எச்சரிக்கும் வகையில் வாசகம் உள்ளது. விஜய்யை சீண்டும் அரசியல்வாதிகளை எச்சரிக்க இது ஒட்டப்பட்டதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *