ஹூபெய் மாநிலத்தில் மேலும் 4,823 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று

சீனாவின் ஹூபெய் மாநிலத்தில் புதிதாக 4,823 பேருக்கு COVID-19 கிருமி தொற்றியுள்ளது. நோய்ப் பாதிப்புக்கு ஆளான 116 பேர் மாண்டனர். அவர்களையும் சேர்த்து சீனாவில் COVID-19 கிருமிப் பாதிப்பால் மாண்டோர் எண்ணிக்கை 1,485-க்கு அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 65,000 பேர் கிருமிப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஹூபெய் மாநிலத்தில் மூத்த அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அந்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *