தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு !!

தமிழக சட்டசபையில் இன்று நடந்த பட்ஜெட் தாக்கலில், ” 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் தொழில் துறைக்கான ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படித்த வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயன்களை விரிவுபடுத்தும் வகையில், தற்போதுள்ள திட்ட முதலீட்டிற்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படுவதுடன், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தகுதி வாய்ந்த மானியத்தின் வரம்பும் ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச மூலதன மானியத்தை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக அரசு உயர்த்தி வழங்கும். இந்த திட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *