செங்கல்பட்டு பஜார் வீதியில் 7 கடைகளில் கொள்ளை முயற்சி !!

செங்கல்பட்டு நெல்லு மண்டி அருகே உள்ள பஜார் வீதியில் நேற்று இரவு, மர்மநபர்கள் புகுந்து அங்குள்ள 7 கடைகளில் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதில் ஒரு கடையில் ரூ.35 ஆயிரத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். மற்ற கடைகளில் பணம் இல்லாததால் கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இன்று காலை கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை திறக்க வந்தபோது, பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *