• January 29, 2020
0 Comments

வங்காளதேசம் அணி பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டி வந்தது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இறுதியில் பாகிஸ்தான் செல்ல வங்காளதேசம் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிப்ரவரி 7-ந்தேதியும், 2-வது டெஸ்ட் ஏப்ரல் ஐந்தாம் தேதியும் தொடங்குகிறது. ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *