• January 29, 2020
0 Comments

புதுடெல்லி,

இந்தியாவில் பொதுமக்கள் வைத்திருக்கும் ஆளில்லா விமானங்களை முறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், வருகிற 31-ந்தேதிக்குள் ஆன்லைன் மூலம் தங்கள் ஆளில்லா விமானங்களை மக்கள் பதிவு செய்ய வேண்டும் என மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஆளில்லா விமானங்கள் மற்றும் அதை வைத்திருப்போரின் அடையாளத்தை அறியும் வகையில், இந்த விவரங்களை தானாக வழங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுமம். எனவே ஆளில்லா விமானம் வைத்திருக்கும் அனைவரும் இந்த ஆன்லைன் பதிவை வருகிற 31-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும். தவறினால் அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் விமான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *