• January 29, 2020
0 Comments

காஷ்மீர்:

ஜம்மூ-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்த வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப்படையின் மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *