• January 29, 2020
0 Comments

தேனி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண்டிப்பட்டி ஒன்றிய 9-வது வார்டு கவுன்சிலர் ஜக்கையன் அளித்த மனுவில், ‘ஆண்டிப்பட்டி அருகே ஏத்தக்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலைக்கு தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. இதனால், கூலி வேலை செய்யும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துரித விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Author

soniajawahar@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *