• January 29, 2020
0 Comments

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பனிப்பொழிவின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.

பனிப்பொழிவு காரணமாக அந்த மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குவெட்டா நகரில் உள்ள விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.

பலூசிஸ்தானில் பனிப்பொழிவு மற்றும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் 7 மாவட்டங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *