• January 29, 2020
0 Comments

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச – பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு, வீம்பு வாதம் பேசி தமிழ் மக்களையும் அதன் அரசியல் தலைமைகளையும் மேலும் சினம்கொள்ள வைக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார் . தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் விரும்புகின்ற அரசியல் தீர்வை ஒருபோதும் வழங்க மாட்டோம் என்று நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியிருந்தார். அரசியல் தீர்வைவிட மேம்பாட்டு தான் தமிழ் மக்களுக்கு அவசியம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *