மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது

24-வது மலபார் கடற்பயிற்சிகள் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறுகிறது. தற்போது இந்தியா-அமெரிக்கா-ஜப்பான்-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இந்த மலபார் பயிற்சியில் 4-வது நாடாக ஆஸ்திரேலியாவும் பங்கேற்க இந்தியா அழைப்பு விடுத்தது. அதன்படி, ஆஸ்திரேலியாவின் ராயல் கடற்படையும் இந்த ஆண்டு மலபார் பயிற்சியில் இணைகிறது. 24-வது மலபார் கடற்பயிற்சி வருகிற 3-ந்தேதி முதல் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதற்கட்ட பயிற்சி 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை விசாகப்பட்டணத்தில் வங்காள விரிகுடா கடலில் நடக்கிறது. இரண்டாம் கட்ட பயிற்சி …

Read More

இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? – பிரகலாத்ஜோஷி பதில்

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி உப்பள்ளியில் பேட்டி அளித்தபோது, இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால் நமது நாட்டில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறது என்று நாங்கள் சர்வதேச அளவில் எடுத்து கூறி வருகிறோம். இப்போது அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தியா வலுவான நாடு என்பது பாகிஸ்தானுக்கு தற்போது புரிந்துள்ளது என்று கூறினார்.

Read More

இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நாளை ஓய்கிறது

கர்நாடக சட்டசபையில் ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 2 தொகுதிகளிலும் மொத்தம் 31 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இரு தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் நாளைமுடிவடைகிறது. இதனால் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று …

Read More

நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது – முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி

நடிகர் தர்ஷன், நடிகை அமுல்யா ஆகியோர் நேற்று ஆர்.ஆர்.நகரில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டனர். இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி அளித்தபோது, பா.ஜ.க.வினர் சினிமா நடிகர்-நடிகைகளை வைத்து பிரசாரம் மேற்கொள்கிறார்கள். இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற முடியாது. சினிமா நடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. நடிகர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கேட்பது இல்லை. எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி அரசை கவிழ்த்தது யார் என்பது குறித்து விவாதிக்க இது …

Read More

முகம்மது அலி சாலையில் ஒட்டப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள்

முகம்மது நபிகள் குறித்த கார்ட்டூன் விவகாரத்தால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளால் இமானுவேல் மேக்ரான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். இந்நிலையில், மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள முகம்மது அலி சாலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் படங்கள் அடங்கிய போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டிருந்தன. இந்த மேக்ரான் படங்கள் மீது வாகனங்கள் செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவின. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அந்த …

Read More

ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்த பிரதமர் மோடி

இரண்டு நாள் பயணமாக குஜராத் வந்த பிரதமர் மோடியை, முதல்-மந்திரி விஜய் ருபானி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அப்போது ஒற்றுமை சிலைக்கான வலைதளம் மற்றும் மொபைல் செயலியை துவக்கி வைத்தார். மேலும் கேவாடியாவில் உள்ள பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிலையில் இன்று கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார். முன்னதாக நேற்று காந்திநகர் சென்ற மோடி, அங்கு மறைந்த முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Read More

சி.ஏ. தேர்வுகள் தள்ளிவைக்கப்படவில்லை – ஐசிஏஐ விளக்கம்

சி.ஏ. சேர்வதற்கு, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா எனப்படும் அமைப்பில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தற்போது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே ஆடிட்டர் படிப்பில் சேரலாம் என இந்திய பட்டயக் கணக்காளர் மையம் அறிவித்துள்ளது. புதிய நடைமுறையை இந்த ஆண்டே அமல்படுத்துவதாக பட்டய கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. இந்திய கணக்குத் தணிக்கையாளர் அமைப்பின் சார்பில் கணக்குத் தணிக்கையாளர் தேர்வு (சி.ஏ.) ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது. தற்போது சி.ஏ. தேர்வுகள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்நிலையில் …

Read More

அமெரிக்க கொரோனா பாதிப்பு 90 லட்சத்தை கடந்தது

வாஷிங்டன், கொரோனா வைரஸ் தாக்குதலில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆனது 90.34 லட்சம் ஆக உயர்வடைந்து உள்ளது.  இதனால் மற்றொரு அலை ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.  தொடர்ந்து பல பகுதிகளில் இந்த வாரத்தில் ஊரடங்கை பிறப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்ய கூடும் என கூறப்படுகிறது.

Read More

தமிழில் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியான நாள் அக்டோபர் 31

காளிதாஸ் 1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது.

Read More

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் அக்டோபர் 31

குஜராத் மாநிலத்தில் உள்ள கரம்சாத் என்ற ஊரில் 1875-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி பிறந்தவர் சர்தார் வல்லபாய் படேல். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இவர், குஜராத் மாநிலத்தில் பிறந்து வழக்கறிஞராக இருந்து பிரிட்டீசாருக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். காந்தியடிகளின் சத்யாகிரக போராட்டங்களில் கலந்து கொண்டார். தைரியமாக வெள்ளையர்களை எதிர்த்து  சிறை சென்றவர். 1947ல் இருந்து 1950 வரை இந்தியாவின் துணைப்பிரதமராக இருந்தவர். 1948-ல் …

Read More