• January 18, 2020
0 Comments

திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் பேரூர் கடை, ஆயுதப்படை போலீஸ் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சஜீவ்குமார். இவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு போலீஸ்காரருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

சம்பவத்தன்று மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் வீடு புகுந்து அந்த மாணவியை கற்பழிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பயத்தில் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் சஜீவ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து மாணவி பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ்குமாரை சஸ்பெண்டு செய்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட சஜீவ்குமார் திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 14 நாட்கள் ஜெயிலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *