• January 18, 2020
0 Comments

களியக்காவிளை ஆர்.சி. தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி, (வயது 39), மீன் வியாபாரி. இவருக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெளியில் சென்றிருந்த அவரது மனைவி வீடு திரும்பியபோது இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *