• January 18, 2020
0 Comments

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் பூஜபுரைவிளை பகுதியைச் சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 68). இவர் ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர், குடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வருவது வழக்கம். சம்பவத்தன்று குடித்து விட்டு அவர் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதில் மன வேதனையுடன் காணப்பட்ட அவர் வீட்டில், வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்தாமரை குளம் காவல் நிலையத்தில் அவரது மகன் விக்னேஷ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *