• January 18, 2020
0 Comments

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் கடந்த நவம்பர் 10-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

லதா குடும்பத்தினர் இது பற்றி கூறியிருப்பதாவது:- “லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து அவர் மீண்டு விட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார். வயது மூப்பின் காரணமாகவே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மற்றபடி அவர் நலமுடன் உள்ளார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *