• January 18, 2020
0 Comments

திருச்சி:

மலேசிய தலைநகர் கோலாலம் பூரிலிருந்து தினம்தோறும் வந்து புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது. மீண்டும் இந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தபோது அதில் ஏற இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பாதர் ரேஷ்மி (43) மற்றும் தாசினா பேகம் (34) ஆகிய இரு பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் உடமைகளில் மறைத்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த ரூ.8.26 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாயும், ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள மலேசியன் ரிங்கிட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *