• January 18, 2020
0 Comments

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி கோமதி (வயது 52). சம்பவத்தன்று இவர் வீட்டில் மண்எண்ணை விளக்கை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சீலையில் தீ பிடித்து உடல் முழுவதும் பரவியது. இதில் அலறித்துடித்த கோமதியின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து அவரை மீட்டனர்.

பின்னர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *