• January 18, 2020
0 Comments

வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் ஜெயஸ்ரீ இன்று சென்னை போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து கணவர் ஈஸ்வர் மீது புதிய புகார் ஒன்றை அளித்தார். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஈஸ்வர் எனது மகளுக்கு நீண்ட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அவருக்கு திருமணத்துக்கு பிறகு குடி பழக்கம் அதிகரித்தது. இதனால் கடன் தொல்லையும் ஏற்பட்டது. குடித்துவிட்டு வந்து என்னை தாக்குவதுடன் மகளிடமும் தவறாக நடந்துகொள்வார்.

டி.வி. நடிகை ஒருவருடன் சேர்ந்து இருக்கும்போது வீடியோ கால் செய்து பேசுவார். இதுபோன்ற செய்கைகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னிடம் இருந்து ஈஸ்வர் அபகரித்த நகை, பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *