• January 18, 2020
0 Comments

வட சென்னை மக்களின் கால்பந்து விளையாட்டை மக்களின் வாழ்வியலை கலந்து சாம்பியன் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுசீந்திரன். விஷ்வா நாயகனாக அறிமுகமாகிறார். மிருணாளினி, சவுமிகா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மனோஜ், நரேன், ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டில் பாரதிராஜா பேசும்போது, ‘சுசீந்தரன் எனக்கு பிடித்த கலைஞன். பாண்டிய நாடு படத்தில் முதலில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இப்ப போய் ஏன் நடிச்சுகிட்டுனு நினைச்சேன். ஆனால் அது எனக்கு ஒரு கம்பேக்காக இருந்தது. சாம்பியன் திரைப்படம் அவனுக்கு இன்னொரு மகுடமாக இருக்கும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *