• January 18, 2020
0 Comments

வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் ஹாரர் படம் தயாராகி உள்ளது. இப்படம் பற்றி வி.இசட் துரை கூறியதாவது:- இது வழக்கமான பேய் படம் அல்ல. ஜின் என்ற புது படைப்பை தென் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறோம்.

இப்படத்தில் சாக்‌ஷி, தன்ஷிகா, விமலா ராமன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அடுத்து அமீர் நடிப்பில் நாற்காலி படத்தை இயக்கி வருகிறேன். அதற்கு அடுத்து சிம்புவுடன் இணைய இருக்கிறேன். அது தொட்டி ஜெயா 2 அல்ல. வேறு ஒரு கதை. தொட்டி ஜெயா 2 கண்டிப்பாக வரும்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *