• January 18, 2020
0 Comments

கோவில்பட்டி:

கோவில்பட்டி இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டி பகுதியை சேர்ந்த தர்மர், முருகலட்சுமி தம்பதி மகன் ஞானசேகருக்கும், வானரமுட்டியைச் சிறுமிக்கும் கோவில்பட்டி பழனி ஆண்டவர் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெறவிருப்பதாக கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவீட்டாரையும் அழைத்துப் பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *