• January 18, 2020
0 Comments

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் இளம் கதாநாயகன் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆக்‌ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு அமர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *