• January 18, 2020
0 Comments

லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். தற்போது விஜய்-விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் கர்நாடகாவில் உள்ள சிறையில் படமாக்கப்பட உள்ளன.

படத்தின் கதை, தலைப்பு, விஜய் கதாபாத்திரம் போன்ற பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது. அதனால் இப்படத்துக்கு டாக்டர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்துக்கு ‘டாக்டர்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *