• January 18, 2020
0 Comments

பல்லடம்:

பல்லடம் பகுதியில் விவசாயத்திற்கு மாற்றுத்தொழிலாக வந்த கோழிப்பண்ணை தொழில் தற்பொழுது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணை தொழில் இரண்டு வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒருவகை. மற்றொன்று கறிக்கோழி வகை. பல்லடம் பகுதியில் உள்ள கோழி பண்ணையாளர்கள் கறிக்கோழி வளர்ப்பில் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர்.

கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி கொள்முதல் விலை தற்போது கார்த்திகை மாத நுகர்வுகுறைவால் விலை குறைந்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள், முருகபக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை மற்றும் பழனிமலைக்கு யாத்திரைக்கான விரதத்தை தொடங்குவார்கள். மேலும் கார்த்திகை தீபம் பண்டிகை வருவதாலும் பொதுமக்கள் பலர் அசைவத்தை தவிர்த்துவிடுவார்கள். இதனால் பெருமளவில் இறைச்சி நுகர்வு குறைந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *