• January 18, 2020
0 Comments

சுவாமிமலை:

கும்பகோணம் பகுதியை அடுத்த ஏராகரம், மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). விவசாயியான இவர், தனது வயலில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின்மோட்டார் அமைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்த போது, மின் மோட்டாரை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் இது குறித்து சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *