• January 18, 2020
0 Comments

நெற்குப்பை:

மதுரையில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பேருந்து இன்று காலை புறப்பட்டது. சிவகங்கை பிரபாகரன் (வயது 40) மதுரை மாடசாமி (28), செந்தில்குமார் (50) உள்பட பலர் பேருந்தில் பயணம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்சிவல்பட்டி அருகே உள்ள சிறுகூடல்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் கவிழந்து விபத்துக்குள்ளானது.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கீழச்செவல்பட்டி போலீசார் விரைந்து வந்துவிபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *