• January 18, 2020
0 Comments

2007 ம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னனி சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்த  முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 709 விக்கெட்களை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

1972ஆம் ஆண்டு  ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்த முத்தையா முரளிதரன் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கினார். அந்தப் போட்டியில் 141 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முரளிதரன் அதன் பிறகு தனது  பந்துவீச்சில் பல சாதனைகளை செய்துள்ளார்.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோலிங்வுட் வீக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் 709 விக்கெட்டுகளை எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *