• January 18, 2020
0 Comments

ஹேமில்டன்:

ஹேமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5வது நாளான இன்று மழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மேற்கொண்டு போட்டி நடத்தமுடியாத சூழலில் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போட்டியில் 2வது இன்னிங்சில் பேட் செய்த நியூசிலாந்து அணியின் வில்லியம்சனும், டெய்லரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். முதலில் வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ரன்னை தொட்டார். 76-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 21-வது செஞ்சூரி ஆகும்.

அதைத்தொடர்ந்து டெய்லர் 184 பந்துகளில் 11 பவுண்டரி 2 சிக்சருடன் 100 ரன்னை எடுத்தார். 96-வது டெஸ்டில் விளையாடும் டெய்லருக்கு 19-வது சதம் ஆகும். டெஸ்டில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் அவர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *