• January 18, 2020
0 Comments

ஹேமில்டன்

ஹேமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன் எடுத்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 476 ரன் குவித்தது.

தொடர்ந்து 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் 37 ரன்களுடனும், முன்னாள் கேப்டன் டெய்லர் 31 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

இதில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய வில்லியம்சனும், டெய்லரும் சதம் அடித்தனர்.  இந்நிலையில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்டம் தொடர முடியாத சூழலில் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.

வில்லியம்சன் 104 ரன்னிலும், டெய்லர் 105 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த டெஸ்ட் டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *