• January 18, 2020
0 Comments

புதுடெல்லி

2020ம் ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 971 வீரர்கள் பங்கேற்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஏலப்பட்டியலில், இடம் பெற்றுள்ள. ராபின் உத்தப்பா, ஷான் மார்ஷ், கானே ரிச்சட்சன், மார்கன், ஜேசன் ராய், கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கிறிஸ் மோரிஸ், அபோட் ஆகியோருக்கு அடிப்படை விலையாக ரூ.1 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *