• January 18, 2020
0 Comments

புதுடெல்லி:

2020ம் ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் 713 இந்திய வீரர்கள், 258 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 971 வீரர்கள் பங்கேற்க தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்களில் 215 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள். 754 பேர் உள்ளூர் போட்டியில் விளையாடியவர்கள். வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 55 வீரர்களும், தென் ஆப்பிரிக்கா 54, இலங்கை 39, வெஸ்ட் இண்டீஸ் 34, நியூசிலாந்து 24, இங்கிலாந்து 22, ஆப்கானிஸ்தான் 19, வங்காளதேசம் 6 மற்றும். அமெரிக்காவில் இருந்து ஒரு வீரரும் இதில் இடம் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *