• January 18, 2020
0 Comments

புதுடெல்லி

அடுத்த ஆண்டு நடைபெறும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 971 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 713 பேர் இந்திய வீரர்களும், 258 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்த ஏலத்திர் 73 வீரர்கள் வாங்கப்படவுள்ளனர்..

இந்நிலையில் இந்த ஏலப்பட்டியலில் இடம் பெற்றிருந்த உலகின் முன்னனி வேகப்பந்து வீரரும், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவருமான ஸ்டார்க் ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து விலகினார். கடந்த 2018ம் ஆண்டு ரூ9.4 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக வாங்கப்பட்ட ஸ்டார்க் காயம் காரணமாக அந்த தொடர் முழுவதும் விளையாடாத நிலையில், கடந்த முறையும் அவர் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *