• January 18, 2020
0 Comments

செங்கோட்டை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு பகுதியை சோ்ந்த கந்தசாமி (35). ஆட்டோ டிரைவரான, இவருக்கு திருமணமாகி இந்துமதி (28) என்ற மனைவியும், மித்ரன் (6) மற்றும் மூர்த்தி (2) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இன்று வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து புளியரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கோட்டை போலீசார் வீட்டின் கதவை திறந்து பார்த்தனர்.

அப்போது கந்தசாமி, அவரது மனைவி இந்துமதி, மூத்த மகன் மித்ரன் ஆகியோர் பிணமாக கிடந்தனர். மேலும் 2-வது மகன் மூர்த்தி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தான். இதையடுத்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கந்தசாமியின் வீட்டு சுவற்றில் கடன் மற்றும் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக புளியரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *