• January 18, 2020
0 Comments

ஈரோடு

ஈரோடு மாணிக்கம்பாளையம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (47). சக்திநகரில் 16 பவர்லூம் தறிகள் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்த இவர், நேற்று காலை சுமார் 10 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வில்லரசம்பட்டி அருகிலுள்ள மொக்கயைம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் கனகராஜ் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொழிலதிபர் கனகராஜ் எந்தக் காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்துகொண்ட கனகராஜ்க்கு வனிதா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *