• January 18, 2020
0 Comments

சோழிங்கநல்லூர்

சென்ளை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருபவர் திருமலை. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த இவர் பச்சையப்பா கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், ரேணுகா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக சென்னை ஈ.சி.ஆர் சாலை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில், இவர்களுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக திருமலை கூறியுள்ளார். இதற்காக மொத்தமாக ரூ. 15 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

மேலும் பணம் பெற்றதற்கு நம்பிக்கை சான்றுகளாக ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் இரண்டு காசோலை வழங்கியுள்ளார். ஆனால் கடந்த ஒரு வருடமாக வேலைவாங்கிக் கொடுக்காமல் திருமலை ஏமாற்றி வந்தார். மேலும் அவர் கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது. இதுபற்றி மணிகண்டன், ரேணுகாதேவி ஆகிய இருவரும் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட திருமலையை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *