• January 18, 2020
0 Comments

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து போட்டியில், நேற்று முன்தினம் மாட்ரிட்டில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி, அட்லெடிகோ மாட்ரிட் அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ மாட்ரிட் அணியை சாய்த்தது.

ஆட்டத்தில் 86-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி வெற்றிக்கான கோலை அடித்தார். இந்த தொடரில் 14-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி பெற்ற 10-வது வெற்றிகள் ஒரு டிரா 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *