• January 18, 2020
0 Comments

பெங்களூரு:

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கம். அதற்காக நாங்கள் எல்லா வகையான, சாதகமான அம்சங்களையும் ஆராய்வோம். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்பட எல்லா விஷயங்களையும் காங்கிரஸ் திறந்த மனதுடன் பரிசீலிக்கும்.

15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜனதா அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. மத்திய-மாநில அரசுகள் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *