• January 18, 2020
0 Comments

பெங்களூரு,

பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் பயணிகள் செல்லும் இடத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி விமான நிலைய பயணிகளின் மத்தியில் ‘மைசூருபாகு’ அதிக வரவேற்பு பெற்றுள்ளது. அதாவது மாதந்தோறும் 10 ஆயிரம் கிலோ ‘மைசூருபாகு’ விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

மேலும் விமான நிலையத்தில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்டுகளில் அதிகமாக விற்பனை செய்யும் உணவுகளில் முதல் இடம் இட்லி பிடித்துள்ளது. அதாவது தினமும் பெங்களூரு விமான நிலையத்தில் 10 ஆயிரம் இட்லியும், 5 ஆயிரம் தோசையும் பயணிகள் வாங்கி ருசித்து வருவதும் தெரியவந்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *