• January 18, 2020
0 Comments

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் காலியாக 15 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 958 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனல் பறந்து வந்த இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இன்று காலை முதலே பிரசாரத்தில் ஈடுபட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *